Suicide வேணா Suicide வேணா
Suicide வேணா Suicide வேணா
Suicide என்பது SameSide Goalu
Clarify பண்ணி Qualify ஆகு
கோடி அணுவை வென்றே தாயின் கருவை அடைந்தவன் நீயே;
உன் பிறப்பே மாபெரும் வெற்றியடா;
ஒவ்வொரு நாளும் கொண்டாடு; உலகம் உனது என்றாடு;
நீட்டை நினைத்து பயந்து போனேன்
தோல்வி அடைந்தால் என்ன ஆவேன்
ஒவ்வொரு நாற்பது வினாடிக்கும் உலகில் ஒருவர் தற்கொலை
பேசித் தீர்க்க வேண்டும் மனதில் உள்ள சிக்கலை
மார்ச் போனால் செப்டம்பர் வருமே
முயற்சி செய்தால் வெற்றியைத் தருமே
இதுவும் கடந்து போகும் எல்லாம் ஒருநாள் மாறும்
வீடியோ கேம் விளையாடத் தடை;
கல்வியில் தோல்வி; குடும்பத்தில் வறுமை;
Love Failure; Business Loss;
Work இல்லை; கடன் தொல்லை; Mind Stress; மனச் சோர்வு;
அடடா அடடா எத்தனை எத்தனை தற்கொலைக்கான காரணங்கள்;
அன்பு, பாசம், உறவு, நட்பு எல்லாம் Lead-u
விட்டுக்கொடுத்தல் சகிப்புத்தன்மை Need-u
நம்பிக்கைதான் வெற்றிக்கான Seed-u
மௌனம் உடைத்து வார்த்தை பறக்க பாடு நீயும் பாடு
ஒருநொடி தோன்றும் முட்டாள்தனமே தற்கொலை;
தூக்கிப்போடு தூக்கிப்போடு எண்ணத்தின் எதிர்மறைக் கற்களை;
படைத்தலைவன் துணிவைக் காட்டிலும் தற்கொலை செய்பவன் துணிவே பெரிது;
மனிதா மனிதா துணிவு இருந்தால் உலகைக் கூட வெல்லலாம்;
Suicide பண்ணாதே.. நீ Suicide பண்ணாதே
காலை விடிந்து காத்து கிடக்கு
நாளை உனக்கு வாழ்க்கை இருக்கு… ஆமா
தோல்வி கணக்கு மணக்கு பிணக்கு ஆ ஆமணக்கு
ஊரே சொன்னாலும் எதிர்த்தே நின்னாலும் கேளு எந்நாளும்
உன்னை விட்டுக் கொடுக்க மறுத்திடு நீ
உடுக்கை அடிக்க புழுதி பறக்க போடு வெற்றி சொடுக்க