தூசுதட்டி குடி புகுந்ததம்மோ
மேளம் கொட்டி ஒரு வெத்தல பொட்டி
மேகத்துக்கே தந்தி அடிக்குதம்மோ
வாசமல்லி ஒரு வார்த்த சொல்லி
வகுடெடுத்து மெல்ல வாருதம்மோ
காத்துலதான் ஒரு செய்தி வந்து
நேத்த எல்லாம் அள்ளி முடிஞ்சதம்மோ
காட்டுமல்லி அந்த கதைய சொல்லி
பாட்டு ஒன்னு இங்க படிக்குதம்மோ
குத்தால சீமைக்கு முத்தாட போவுது
தக்காண பூமிக்கு தண்ணீரும் பாயுது
கத்தால பூவுக்கு கச்சேரி கூடுது
மத்தாள தோலுக்கு மஞ்சளும் சேருது
போகுதம்மோ ஒரு பொன்னாங்கண்ணி
ஆலங்கட்டி ஒரு பாலம் கட்டி
காயமெல்லாம் இப்ப ஆருதம்மோ
சித்திர வெய்யிலு சில்லுனு காயுது
நெத்திலி மீனுக்கு நித்திர போவுது
கத்திரி வளைஞ்சு கம்மலும் ஆவுது
கொப்பற வானமும் பொத்துன்னு தூவுது